மீத்தேன் , ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது-அமைச்சர் ஜெயக்குமார்.!

Tamil Nadu government will not allow methane and hydrocarbon project - Minister Jayakumar

  • ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறு அமைப்பதற்க்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் பெற வேண்டியது  கட்டாயம் இல்லை என மத்திய அரசு கூறியது.
  • ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது எனவும் ,மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அதிமுக அரசு ஆதரிக்காது என ஜெயக்குமார் கூறினார்.
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் , ஒ.என்.ஜி.சி நிறுவனம் விளை நிலங்களில் குழாய் பதிக்கக்கூடாது எனவும் அப்படி குழாய் பதிப்பதனால் விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறு அமைப்பதற்க்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் பெற வேண்டியது  கட்டாயம் இல்லை எனவும் , மேலும் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த தேவையில்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த உத்தரவிற்கு அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று  சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் , ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது எனவும் ,மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அதிமுக அரசு ஆதரிக்காது என கூறினார்.மேலும் மீத்தேன் , ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மாநில அரசின் ஒப்புதல் கொடுக்கவில்லை , எதிர்காலத்தில் கொடுக்கவும் கொடுக்காது என்று தெரிவித்தார்.