பாரத் ஸ்டேட் வங்கி விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக அபராதம்!

பாரத ஸ்டேட் வங்கிக்கு கள்ளநோட்டுத் தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக  40லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வங்கிக்கு வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் பணத்தில் கள்ளநோட்டு இருந்தால் அவற்றை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதியாகும். கள்ளநோட்டுப் புழக்கத்தைத் தடுக்க இதுபோன்ற விதிகளை ரிசர்வ் வங்கி வகுத்தளித்துள்ளது.

இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் இரு கிளைகளில் பணம் வைக்கப்பட்டுள்ள அறைகளில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது கள்ளநோட்டுக்கள் குறித்த விதிமுறைகளை மீறியிருப்பதும் பின்பற்றத் தவறியிருப்பதும் கண்டறியப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஜனவரி மாதம் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.

இந்த விளக்கத்தைப் பரிசீலித்தபோது விதிமுறைகளை மீறியிருப்பது உறுதி செய்யப்பட்டதால் பாரத ஸ்டேட் வங்கிக்கு 40லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment