கோடைகாலம் தொடங்கிட்டுங்க! இந்த காயை மட்டும் மறக்காம சாப்பிடுங்க!

சுரைக்காயின் மருத்துவ பயன்கள். கோடைகாலம் என்றாலே ஒவ்வொருவரும் தங்களது

By leena | Published: May 27, 2020 11:28 AM

சுரைக்காயின் மருத்துவ பயன்கள்.

கோடைகாலம் என்றாலே ஒவ்வொருவரும் தங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். ஏன்னென்றால், வெப்பத்தின்  தாக்கம் அதிகமாக இருக்கும் போது, நமது உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு  பல நோய்கள் ஏற்பட  வாய்ப்புள்ளது. 

எனவே இந்த கோடைகாலங்களில்  நீர்சத்து நிறைந்த ஆகாரங்களை உட்கொள்வதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். தற்போது இந்த பதிவில், நமது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளித்து, உடல் ஆரோக்யத்தை மேம்படுத்தும், சுரைக்காயின் பயன்கள் பற்றி பார்ப்போம். 

சிறுநீரக கோளாறு 

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி சுரைக்காயை உணவில் சேர்த்து  வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். 

உடல் சூடு

தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நமது உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து, உடல் சூடு அதிகமாக காணப்படும். அதிகமான உடல் சூட்டால், நமது உடலில் பல ஆரோக்கியக்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்னைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள, நமது உணவில் சுரைக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. 

அஜீரண கோளாறு 

இன்று பலருக்கும் செரிமான பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இந்த காயை சாப்பிட்டு  வந்தால்,செரிமான பிரச்சனையை போக்கி, நா வறட்சியையும் போக்குகிறது. 

 

Step2: Place in ads Display sections

unicc