தொடர்ந்து அமைதிகாத்தால் நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு அறப்போராட்டம்- ஸ்டாலின் அறிக்கை

தொடர்ந்து அமைதிகாத்தால் நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு அறப்போராட்டம்- ஸ்டாலின் அறிக்கை

  • குடியுரிமை சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்டது. 
  • நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஜனநாயக ரீதியில் அறப்போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல் படுத்தியது.இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.எனவே திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக  கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பேரணி நடைபெற்றது. எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையிலிருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர்  திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.ஆனால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்து பின்னர் இந்த சட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் மக்கள் கொதித்து எழுந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் வேறுபாடு தெரியாமல் அதிமுக அரசு மவுனம் காப்பது அதிர்ச்சியளிக்கிறது . மத்திய பாஜக அரசு தற்போது மக்கள் தொகை பதிவேடு கொண்டு வருவதின் உள்நோக்கம் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்குத்தான் என்ற அடிப்படை உண்மையை மறைக்கும் முயற்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடிப் பழனிசாமி திசை திருப்புவது கவலையளிக்கிறது.

என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி-யை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்க வேண்டும். தொடர்ந்து அ.தி.மு.க அரசு அமைதி காத்தால், விரைவில் மாபெரும் போராட்டத்தை, நாடே திரும்பிப் பார்க்கும் ஜனநாயக ரீதியிலான அறப்போராட்டத்தை இணக்கமான கருத்துடைய கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube