காவல்துறையை பயன்படுத்தி அமைச்சர் வேலுமணி அத்துமீறலில் ஈடுபடுகிறார் – ஸ்டாலின் கண்டனம்

காவல்துறையை பயன்படுத்தி அமைச்சர் வேலுமணி அத்துமீறலில் ஈடுபடுவதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு உள்ள குறைகளைப் பற்றி செய்திகளை வெளியிட்டதற்காக கோயம்புத்தூரில் இணையதள பத்திரிக்கையின் உரிமையாளர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கைவிட்டு, ஊடகத்தினர் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.ஊடகத்தினர் மீது வன்மம் கொண்டு, ஏற்கனவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செயல்பட்ட நிலையில், தற்போது முதலமைச்சரின் நிழலாக வலம்வரும் அமைச்சர் வேலுமணி காவல்துறையைப் பயன்படுத்தி அதிகார அத்துமீறல் நடத்தி ஆட்டம் போடுவதை திமுக-வின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.