நாடே பற்றி எரிகிறது! அது தொடர்பாக பேரவையில் விவாதிக்க வேண்டும்! - மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு!

புத்தாண்டிற்கு பிறகு முதல் முறையாக தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கியது. 

By manikandan | Published: Jan 07, 2020 12:16 PM

  • புத்தாண்டிற்கு பிறகு முதல் முறையாக தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கியது. 
  • இரண்டாவது நாளான இன்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். 
2020ஆம் ஆண்டு தொடங்கி முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. நேற்று முதல் நாளில் ஆளுநர் உரை நிகழ்த்தினார். நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ .பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவார் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் என எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டார்.  இதில் திமுகவினர் மற்றும் அதன் தோழமை காட்சிகள் நேற்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதே போல இன்று இரண்டாம் நாள் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதிலும் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பேரவையில் விவாதம் கோரப்பட்டது. அதற்கு சட்டசபையில் அனுமதி கொடுக்கப்படாததால் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்கு பிறகு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசுகையில், ' குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தால் நாடே பற்றி எரிந்து வருகிறது. இந்த குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால்  விவாதம் நடத்த அனுமதி அளிக்கவில்லை. அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் ' என்றவாறு ஸ்டாலின் கூறினார்.
Step2: Place in ads Display sections

unicc