பொதுமேடையில் விவாதம் நடத்த ஸ்டாலின் தயாரா? மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

  • தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து வருகிறது.
  • மத்தியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியின் போது தமிழகத்திற்கு எத்தனை திட்டத்தை கொண்டுவந்தார்கள்.

பொதுமேடையில் விவாதம் நடத்த ஸ்டாலின் தயாரா? என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து வருகிறது. எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை.

மத்தியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியின் போது தமிழகத்திற்கு எத்தனை திட்டத்தை கொண்டுவந்தார்கள்?… பொதுமேடையில் விவாதம் நடத்த ஸ்டாலின் தயாரா? என்று சவால் விடுத்துள்ளார்.

மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு எத்தனை ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் செய்தது என்பதை பட்டியலிட நாங்கள் தயார் . இலங்கை தமிழர் விவகாரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வைகோ பேசியது போல், இப்போதும் பேசுவார் என எதிர்பார்க்கிறேன் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment