விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது ஸ்டாலினுக்கு – முதல்வர் பழனிசாமி

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது ஸ்டாலினுக்கு – முதல்வர் பழனிசாமி

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது ஸ்டாலினுக்கு என்று  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 
சேலத்தில்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த  கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசுகையில்,  எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், விவசாயிகளை கொச்சைப்படுத்திப் பேச வேண்டாம். ஸ்டாலினின் பிரசாரத்திற்கு விளக்கமளிக்கும் விதமாக திட்டங்களை பட்டியலிட்டு காண்பித்துள்ளோம்.
அதிமுக அரசு திட்டங்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் ஸ்டாலின் சொல்லட்டும். விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின்  தமிழகத்தில் உள்ளார்.ஒரு விவசாயி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நான் உதாரணம் .
தமிழகத்திற்கு அதிமுக அரசுதான் 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்று தந்தது .அதிமுக அரசின் அனைத்து திட்டங்களும் காலத்தால் அழிக்கமுடியாத திட்டங்கள்.அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு தடையின்றி மருத்துவ சேவை வழங்கப்படுகிறது என்று பேசினார்.
Join our channel google news Youtube