அதிமுக அமைச்சரவை அல்ல – சுற்றுலா அமைச்சரவை-ஸ்டாலின் விமர்சனம்

தற்போது இருப்பது அதிமுக அமைச்சரவை அல்ல – சுற்றுலா அமைச்சரவை  என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெல்லை நெற்கட்டும்செவலில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பது அதிமுக அமைச்சரவை அல்ல – சுற்றுலா அமைச்சரவை ஆகும். உலக முதலீட்டாளர் மாநாடுகளில் அறிவித்த ரூ.5.42 லட்சம் கோடி முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடாமல் பொழுதுபோக்காக சுற்றுலா சென்றுள்ளனர்.

ஏற்கனவே நடந்த 2 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் வந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யார் போட்டி என்பது குறித்து, தேர்தல் தேதி அறிவித்த பின் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.