அகோரி படம் குறித்து மனம் திறந்த ஸ்ருதி! என்ன கூறியுள்ளார் தெரியுமா?

  • அகோரி படம் குறித்து ஸ்ருதி கூறும் கருத்து.
  • படத்தில் கல்லூரி மாணவியாக ஸ்ருதி.

நடிகை ஸ்ருதி ராமகிருஷ்ணன் கன்னடம் மற்றும் மலையாளம் படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர். இவர் தமிழில் ,ஆண்மை தவறேல்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து 144, நாரதன் மற்றும் கவலை வேண்டாம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் அகோரி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவர் கல்லூரி மாணவியாகவும், தீய சக்திகளை எதிர்த்து போராடும் பெண் சக்தியாகவும் நடித்துள்ளார்.

இப்படம் குறித்து அவர் கூறுகையில், சிவனடியாராக உள்ள ஒரு அகோரிக்கும், தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை. இந்த படம் ஒரு முழுமையான பொழுதுபோக்கு படம். இந்த படத்தில் ஆறிலிருந்து அறுபது வரை அணைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும் படி உருவாகியிருக்கிறது. படத்தில் ஒரு மணி நேர கம்பியூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.