நாடு முழுவதும் 144 தடை! மீறினால் துப்பாக்கி சூடு?! கொழும்புவில் பதற்றம்!

இலங்கையில் சில நாட்களுக்கு முன்னர் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி பல இடங்களில் வெடிகுண்டுகள்

By Fahad | Published: Apr 01 2020 05:14 PM

இலங்கையில் சில நாட்களுக்கு முன்னர் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி பல இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்து மக்கள் பலர் இதில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் இலங்கை முழுவதும் பதற்றமான சூழல் தற்போதும் நிலவி வருகிறது. தற்போது அங்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் இலங்கை தலைநகர் கொழும்புவில் போலீசார், ராணுவத்தினர் என குவிந்து ஆங்காங்கே துப்பாக்கிகளுடன் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு எந்த பகுதிகளில் எந்த வாகனங்கள் நுழைந்தாலும் சோதனைகளுக்கு உட்பட்டு தான் உள்ளே அனுமதிக்க படுகிறது. இந்த ஊரடங்கு உத்தரவை மீறினால் துப்பாக்கி சூடு நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. DINASUVADU

More News From WORLD NEWS TAMIL