பாகிஸ்தானில் சுற்று பயணம் செய்து அதிக ரன்கள் அடித்த பட்டியலில் இலங்கை வீரர்கள்..!

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நேற்று கடைசி மற்றும் 3-வது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்து 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
நேற்றைய போட்டியில் இலங்கை வீரர் ஓஷாடா 78* ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இதனால் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து  சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஓஷாடா முதல் இடத்தில் உள்ளார்.
இதற்கு முன் கடந்த 07-தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை வீரர் பானுகா ராஜபக்ஷ 77 ரன்கள் அடித்தார்.அதுவே  அதிகபட்ச ரன்னாக இருந்தது.அதை முறியடித்து தற்போது ஓஷாடா முதல் இடத்தில் உள்ளார்.

author avatar
murugan