இலங்கை குண்டு வெடிப்பு விவகாரம் ! வித்தியாசமான முறையில் தனது அனுதாபத்தை தெரிவித்த சிற்ப கலைஞர்

இலங்கையின் தலைநகரான கொழும்பில் நேற்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் வெடி குண்டுகள் வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 290 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் இலங்கை குண்டுவெடிப்பை கண்டித்து மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த சிற்பத்தில், குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வாசகங்களுடன், இலங்கைக்கு தாங்கள் எப்போது ஆதரவாக நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் ஏராளமானோர் இங்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment