கருணாரத்னே அதிரடி! நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அபார வெற்றி!

இலங்கை , நியூஸிலாந்து அணி இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி 20 போட்டிகளில்

By murugan | Published: Aug 18, 2019 03:09 PM

இலங்கை , நியூஸிலாந்து அணி இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்சில் 249 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 267 ரன்கள் எடுத்தது.18 ரன் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை தொடங்கிய நியூஸிலாந்து அணி 285 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டை இழந்து. பின்னர் 268 ரன்கள் இலக்குடன் இன்று கடைசி நாள் ஆட்டத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை தொடங்கிய இலங்கை அணியின்  தொடக்க வீரர்களாக திரிமன்னேவும்  , திமுத் கருணாரத்னேவும் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக விளையாடிய இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய வந்த திரிமன்னே 64 ரன்கள் எடுத்து வெளியேறினர்.இவர்கள் இருவரின் கூட்டணியில் 161 ரன்கள் குவித்தனர். பின்னர் களமிங்கிய குசல் மெண்டிஸ் 10 ரன்களுடன் வெளியேறினர். நிதானமாக விளையாடிய திமுத் கருணாரத்னே 122 ரன்கள் குவித்தார்.இறுதியாக இலங்கை அணி 86.1 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  
Step2: Place in ads Display sections

unicc