7 விக்கெட்டையும் கடைசி பந்தில் இழந்த இலங்கை அணி..!

இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. நேற்று

By murugan | Published: Oct 10, 2019 01:15 PM

இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. நேற்று மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி லாகூரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஓஷாடா 78 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அமீர் 3 விக்கெட்டுகளை பறித்தார். பாகிஸ்தான் அணி 148 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது .இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இப்போட்டியில் இலங்கை அணி பறிகொடுத்த 7 விக்கெட்டும் ஓவரின் கடைசி பந்தில் தான் என்பது குறிப்பிடதக்கது. 1 -வது விக்கெட் இழந்தது - 2.6 ஓவர் 2- வது விக்கெட் இழந்தது - 3.6 ஓவர் 3- வது விக்கெட் இழந்தது - 4.6 ஓவர் 4-வது விக்கெட் இழந்தது - 7.6 ஓவர் 5- வது விக்கெட் இழந்தது - 17.6 ஓவர் 6- வது விக்கெட்  இழந்தது - 18.6 ஓவர் 7- வது விக்கெட் இழந்தது - 19.6 ஓவர்
Step2: Place in ads Display sections

unicc