பாகிஸ்தான் அணியை ஒய்ட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றிய இலங்கை ..!

இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

By Fahad | Published: Apr 03 2020 04:08 PM

இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டியில் இலங்கை அணி வென்று தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. நேற்று மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி லாகூரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஓஷாடா 78 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அமீர் 3 விக்கெட்டுகளை பறித்தார். பின்னர் 148 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஹரிஸ் சோஹைல் 52 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி தரப்பில் வாணிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் மூலம் இலங்கை அணி 3 -0 என்ற கணக்கில் பாகிஸ்தானை ஒய்ட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது.

More News From SL tour