புரட்டாசி மாதத்தில் அசைவம் நமது உணவில் சேர்க்க கூடாது என்பதற்கான ஆன்மீக தகவல்களும் அறிவியல் ரீதியான உண்மைகளும் !

புரட்டாசி மாதத்தில் அசைவம் நமது உணவில் சேர்க்க கூடாது என்பதற்கான ஆன்மீக தகவல்களும் அறிவியல் ரீதியான உண்மைகளும் !

புரட்டாசி மாதத்தை புனிதமான மாதம் இன்று சொல்வார்கள் இந்த மாதத்தில் நாம் அசைவம் சாப்பிடாமல் சைவம் சாப்பிடுவது மிகவும் நல்லது.இந்த மாதத்தில் நாம் அசைவம் சாப்பிடாமல் சைவம் மட்டும் சாப்பிட்டு பெருமாளை வணங்கி வந்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்பது உண்மை.
அதற்கான அறிவியல் ரீதியான உண்மைகளையும் ,ஆன்மீக தகவல்களையும் இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
இந்த புரட்டாசி மாதம் காற்றும் ,வெயிலும் குறைந்து காணப்படும்.இந்த மாதத்தில் பூமியானது அதிக அளவு வெப்பத்தை பூமியில் இருந்து வெளிவிடும். இந்நிலையில் இந்த மாதத்தில் நாம் அசைவம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொண்டால் அது உடலில் சூட்டை கிளப்பி விடும். எனவே நாம் புரட்டாசி மாதத்தில் நாம் அசைவ உணவுகளை எடுத்து கொள்வதை விட்டுவிட்டு சைவ உணவுகளை எடுத்து கொள்வது நமது உடலிற்கு மிகவும் நல்லது.இது அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது.
புரட்டாசி மாதத்தை புத பகவான் ஆட்சி செய்வதால் புதன் பகவானுக்கு பிடித்த சைவ உணவுகளை உட்கொண்டு பெருமாள் கோவிலுக்கு தினமும் உணவில் சேர்த்து  துளசி தீர்த்தத்தை நாம் குடித்து வந்தால் நமது உடல் வலிமை பெறும்.
 
 

Join our channel google news Youtube