#BREAKING: சிறப்பு ரயில் சேவை தடை ஆகஸ்ட் 15 வரை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே.!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக  ரயில் சேவை முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்த ரயில்களும் கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி அதாவது இன்று வரை ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மீண்டும்  ரயில்கள் நிறுத்தப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


அதன்படி, திருச்சி-செங்கல்பட்டு, மதுரை-விழுப்புரம், கோவை-காட்பாடி, அரக்கோணம்-கோவை, கோவை-மயிலாடுதுறை, திருச்சி-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

author avatar
murugan