கொரோனா விதிகளை மீறினால் புதுவையில் 1000 ரூபாய் அபராதம் – கலெக்டர் அருண்!

கொரோனா விதிகளை மீறினால் புதுவையில் 1000 ரூபாய் அபராதம் – கலெக்டர் அருண்!

கொரோனா விதிகளை மீறினால் புதுவையில் நபருக்கு 1000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என கலெக்டர் அருண் அவர்கள் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தமிழகம் முழுவதிலும் மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், புதுச்சேரியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுவையில் தினமும் 3000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது, இதனை தொடர்ந்து வீடுகளிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புதுச்சேரி அரசும் கையாண்டு வருகிறது.

இந்நிலையில், வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து செல்லவேண்டும். கையுறைகள் பயன்படுத்த வேண்டும், சுகாதாரமாக இருக்கவேண்டும் என பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனை மீறி நோய்த்தொற்று பரவுவதற்கு காரணமாக இருக்கக் கூடியவர்கள் மீது 2020 பிரிவு 4 ஏ இன் கீழ் தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறுபவர்கள் என அபராதம் வசூலிக்க தற்போது சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி விதிகளை மீறினால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும், தனிமையிலிருந்து சிகிச்சை பெறுபவர்கள் இந்த விதிமுறைகளை மீறும் பொழுது ஆயிரம் ரூபாயாக வசூலிக்கப்படும் எனவும், புதுவை மாவட்ட கலெக்டர் அருண் அவர்கள் கூறியுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube