நீட் தேர்வில் குளறுபடி! உதித் சூர்யாவை தேடி சென்னை புறப்பட்டது தனிப்படை!

தேனி மருத்துவ கல்ல்லூரியில் நீட் தேர்வெழுதி பயின்று வந்த உதித் சூர்யா என்பவரது

By manikandan | Published: Sep 19, 2019 01:51 PM

தேனி மருத்துவ கல்ல்லூரியில் நீட் தேர்வெழுதி பயின்று வந்த உதித் சூர்யா என்பவரது நீட் தேர்வு  நுழைவு சீட்டில் உள்ள புகைப்படமும்,  தற்போதைய புகைப்படமும் ஒன்றாக இல்லாத காரணத்தால் அவர் மீது சந்தேகம் எழுந்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அந்த மாணவன் மனஅழுத்தம் காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டு சென்றதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து, தேனி மருத்துவ கல்லூரி நிர்வாகம், உதித் சூர்யாவின் விவரங்களை மருத்துவ தலைமை கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைத்தது. உதித் சூர்யா மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆள்மாறாட்டம், ஆவணங்களை தவறாக சமர்ப்பித்தல், கூட்டு சதி  என் மூன்று பிரிவுகளின் கீழ் உதித் சூர்யா மற்றும் அவருக்கு மாற்றாக தேர்வெழுதிய நபர் மீதும் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.  இந்நிலையில் உதித் சூர்யா அவரது சென்னை வீட்டிற்கு சென்றுள்ளதால், அவரிடம் விசாரிக்க 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தேனியில் இருந்து சென்னை புறப்பட்டனர்.
Step2: Place in ads Display sections

unicc