சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வு விசாரணை உகந்தது – சிதம்பரம்

சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வு விசாரணை உகந்தது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இதற்கு நீதி வேண்டும் அரசியல் கட்சியினர்,சினிமா பிரபலங்கள்,விளையாட்டு பிரபலங்கள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.உயிரிழந்த தந்தை-மகனுக்கு மக்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் தங்களின்  கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி   தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று தெரிவித்தார்.இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  தூத்துக்குடியில் காவல் துறையினர் கைது செய்து காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு (தந்தை, மகன்) நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கிறது.1996 ஆம் ஆண்டில் டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதி மன்றம் வகுத்த விதிகளை மத்திய, மாநில் காவல் துறைகள் பின்பற்றுவதில்லை என்பதே உண்மை.சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து. இருந்தாலும் சிபிஐ விசாரணையை வரவேற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.