10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரன்!

தேர்வெழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கு துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஜூன் 30 வரை 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் இன்று முதல் அரசு பேருந்துகள் 50% பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளும் 60% பயணிகளுடன் இயங்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுத்தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கு துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரன் தெரிவித்தார்.