விண்வெளி வீராங்கனையாக ஆசைப்படும் மாணவி! உதவிக்கரம் நீட்டிய மக்கள்செல்வன் விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் உள்ளார். இந்நிலையில், இவர் தேனி மாவட்டத்தில், அல்லிநகரத்தை சேர்ந்த மாணவி உதய கீர்த்திகா இஸ்ரோ சார்பாக அனுப்பப்படுகிற விண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்து, இந்தியாவுக்கான விண்வெளி வீராங்கனை ஆக வேண்டும் என்பது தான் அவரது ஆசை.
இந்நிலையில், போலாந்து நாட்டில் உள்ள விண்வெளி “Analogaustronauttrainingcentre” என்ற விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் இடம் கிடைத்துள்ள நிலையில், அதற்கான மொத்த செலவு மொத்தம் 8 லட்சம் ஆகுமாம்.

இதனையடுத்து, நடிகர் விஜய் சேதுபதி, அந்த மாணவிக்கு தேனி மாவட்ட ரசிகர்கள் மூலம் மாணவிக்கு தேவியான உதவிகளை செய்துள்ளார். படப்பிடிப்பின் காரணமாக விஜய்சேதுபதி வெளியூரில் உள்ளதால், மனைவிக்கு தொலைபேசி மூலம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.