டெஸ்ட் போட்டியில் சச்சினின் சிக்சரை சமன் செய்த சவுதி!

நியூஸிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இந்த இரு

By murugan | Published: Aug 17, 2019 08:45 AM

நியூஸிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கலேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ரன்கள் குவித்தது. இப்போட்டியில்  நியூஸிலாந்து அணி  வீரர் டிம் சவுதி 19 பந்தில் 14 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.அதில் ஒரு சிக்ஸர் அடக்கும்.இதன் மூலம் டெஸ்ட் போட்டியில்  கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் 329 இன்னிங்ஸில் 69 சிக்ஸர் விளாசி இருந்தார். அதை தற்போது டிம் சவுதி சமன் செய்து உள்ளார்.இவர் 89 இன்னிங்ஸில் 69 சிக்ஸர் விளாசி உள்ளார்.இன்னும் ஒரு சிக்ஸர் அடித்தால் சச்சின் விட அதிக சிக்ஸர் விளாசிய பெருமையை பெறுவார்.
Step2: Place in ads Display sections

unicc