தென் சென்னை தொகுதி நிலவரம்! மருத்துவரா? கவிஞரா?? திமுக VS அதிமுக

தென் சென்னை தொகுதி நிலவரம்! மருத்துவரா? கவிஞரா?? திமுக VS அதிமுக

அதிமுகவும் திமுகவும் இரு தேசிய கட்சிகளோடும் பலமான கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. இருக்காட்சிகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் தொகுதிகளில் போட்டி பலமான போட்டி உருவாகியுள்ளது. அப்படி அவர்கள் மோதிகொள்ளும் தொகுதிகளில் ஒன்று தென் சென்னை தொகுதி!

 

தென் சென்னை தொகுதியானது, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராஜ நகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இந்த தொகுதியில் திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலு 1991 முதல் 2004 வரை ஐந்து முறை போட்டியிட்டு தொடர்ந்து நான்கு முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு 2009இல் அதிமுகவை சேர்ந்த சி.ராஜேந்திரன் வெற்றிபெற்றுள்ளார். அதனை அடுத்து நடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

Related image

அதில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக சார்பில் தமிழக அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் டாக்டர் ஜெயவர்த்தன் தனது 26 வயதில் வெற்றி பெற்று இளம் வயதில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். தற்போதும் அதிமுக சார்பில் டாக்டர் ஜெயவர்தன் அவர்களே நிற்கிறார். மீண்டும் படித்த இளம் மருத்துவர் நிற்பதால் போட்டி பலமாக இருக்கிறது.

அதற்க்கு சற்றும் குறைவில்லாமல் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.தங்கபாண்டியன் அவர்களது மகளும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் முதல், அமைச்சராக பணியார்றிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களது அக்கவுமான, கவிஞர். தமிழச்சி தங்கபாண்டியன் (T.சுமதி ) போட்டியிட களமிறக்க பட்டுள்ளார்.

தமிழச்சி தங்கபாண்டியன், விருதுநகரில் பிறந்து வளர்ந்து மதுரை மீனாட்சி கலை கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை, முதுகலை பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவரது கணவர் காவல்துறை அலுவலர் சந்திரசேகர் ஆவார். இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் எஞ்சோட்டு பெண், வனப்பேச்சி, பேச்சரவம் கேட்டிலையோ, மஞ்சணத்தி ஆகிய கவிதை தொகுப்புகளையும், அருகன், பாம்படம், சொல் தொடும் சுரம் ஆகிய கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவற்றை பாராட்டி பலர் எழுதிய கட்டுரைகளை தொகுத்து காலமும் கவிதையும் – தமிழச்சியின் படைப்புலகம் என்று அவரே வெளியிட்டுருந்தார். கடித தொகுப்புகளை காற்று கொணர்ந்த கடிதங்கள் என தொகுத்து வெளியிட்டிருந்தார்.

தென் சென்னை நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி.தினகரனின் அமமுக  சார்பாக முன்னாள் எம்.எல்.ஏ Dr.இசக்கி சுப்பையா.MA.ML Ph.D அவர்கள் போட்டியிட உள்ளார். இவர் அக்கட்சியின் புரட்சித்தலைவி அம்மா பேரவை இணை செயலாளராக உள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *