தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் மார்னே மார்க்கல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…!!

 

வரும் வியாழன் முதல் ஆஸ்திரேலியாவுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அல் பி மார்க்கல் சகோதரர் மோர்னே மார்கல் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

33 வயதான மார்க்கல், 21 வயது முதல் சர்வதேச அரங்கில் விளையாடி வருகிறார். 12 வருடங்களில் அவர் 83 டெஸ்ட் போட்டிகள், 117 ஒருநாள் போட்டிகள், 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 294 விக்கெட்களும், ஒருநாள் போட்டிகளில் 188 விக்கெட்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தென் ஆப்பிரிக்காவின் முன்னால் ஆல்ரௌண்டர் பி மார்க்கல் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment