ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இரண்டாவது இடத்திற்கு தள்ளிய தென்னப்பிரிக்கா!

நேற்றைய இரண்டாவது  போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் ,தென்னப்பிரிக்கா அணியும் மோதியது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்காவின் தொடக்க வீரர்களாக ஐடன் மார்க்ராம் , குயின்டன் டி கோக் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடி இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

 சிறப்பாக விளையாடிய ஐடன் மார்க்ராம் 37 பந்தில் 34 ரன்கள் அடித்து வெளியேறினர். பின்னர் அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் களமிங்கினர்.அதிரடியாக விளையாடி வந்த குயின்டன் டி கோக் அரைசத்தைதை நிறைவு செய்த அடுத்த சில பந்திலே 52 ரன்னுடன்  அவுட் ஆனார்.

பிறகு ராஸி வான் , டு பிளெஸ்ஸிஸ்  இருவரும் கூட்டணியில் இணைத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.நிதானமாக விளையாடிய கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 94 பந்தில்  100 ரன்கள் குவித்தார்.அதில் 7 பவுண்டரி ,2 சிக்ஸர் அடக்கும்.

பின்னர் ஆட்டம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் ராஸி வான்  95 ரன்கள் அடித்தார்.இன்னும் ஐந்து ரன்கள் ராஸி வான் அடித்து இருந்தால் தென்னாப்பிரிக்கா அணியில் இன்றைய போட்டியில் இரண்டு சதம் அடித்து இருக்கும் ஆனால் அது தவறியது.

இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 325 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் , நாதன் லியோன் இருவருமே தலா இரண்டு விக்கெட்டை பறித்தனர்.

326 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச் ,
டேவிட் வார்னர் இருவரும்  களமிறங்கினர்.கேப்டன் ஆரோன் பிஞ்ச் நான்கு பந்துகள் மட்டுமே சந்தித்து 3 ரன் எடுத்து வெளியேறினர்.பின்னர் உஸ்மான் கவாஜா களமிறங்கி  3 பவுண்டரி விளாசி 18 ரன்னில் அவுட் ஆனார்.

பிறகு  இறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 7  , மார்கஸ் ஸ்டோனிஸ் 22 ரன்களுடன் விக்கெட்டை பறி கொடுத்தனர்.இந்நிலையில் மத்தியில் களமிறங்கிய அலெக்ஸ் கேரியும் , தொடக்க வீரரான டேவிட் வார்னர் இருவரும் கூட்டணியில் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதன் மூலம் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த  அலெக்ஸ் கேரி ,  டேவிட் வார்னர் இருவருமே அரைசதம் அடித்தனர்.தொடர்ந்து விளையாடி வந்த டேவிட் வார்னர் 117 பந்தில் 12 ரன்கள் குவித்தார்.அதில் 15 பவுண்டரி , 2 சிக்ஸர் விளாசினார்.

டேவிட் வார்னர் வெளியேறிய பிறகு நிதானமாக நின்று அலெக்ஸ் கேரி 69 பந்தில் 85 ரன்கள் குவித்தார்.பிறகு இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 315ரன்கள் அடித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது.ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்ததன் மூலம் இரண்டாம் இடத்திற்கு புள்ளி பட்டியலில் இறங்கியது.

author avatar
murugan