தமிழிசை- சோபியா வாக்குவாத விவகாரம்…!சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவு …!

தமிழக பாஜக தலைவர்  தமிழிசை- சோபியா வாக்குவாத விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிக்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார்.

 

அவர் சென்ற அதே விமானத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா என்ற மாணவியும் பயணித்தார் இவர் கனடாவில் உள்ள மாண்ட்ரியல் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப்படிப்பு படித்து  வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானம் தரை இறங்கிய நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் மாணவி  சோபியா தன்னுடைய கையை உயர்த்தி பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கோஷமிட்டார் என்று சொல்லப்படுகிறது.இந்த பாசிச கோஷம் பாச சண்டையாக மாறி விமான நிலையத்திலே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் ஆத்திரமைடைந்த தமிழிசை இதுகுறித்து  மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார்.

Image result for sophia tamilisai

 

இந்த நிலையில் மாணவி சோபியா மீது மூன்று பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அன்றே மாணவியை கைது செய்யப்பட்டார்.மறுநாள் நீதிமன்ற நீதிபதி அறிவுறுரையின் படி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

சோபியாவின் தந்தை பாஜக தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜகவினர் தன் மகளை மிரட்டியதால் அவர்களை பெண்கள் வதை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சோபியா வாக்குவாத விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அதில்  விமான நிலையம், காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய புதுக்கோட்டை காவல் ஆய்வாளர், விமான நிலைய இயக்குநருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல்  விமானத்தில் பயணித்தவர்களின் விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது

Leave a Comment