தலைவரின் நல்லாசியுடன் புத்தாண்டு இனிதே தொடங்கியது! டிவிட்டரில் சூரி நெகிழ்ச்சி பதிவு

  • தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூரி.
  • இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னனி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் சூரி, இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கிராமத்து பின்னணி கொண்ட படமாக உருவாகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தலைவர் 168 ஷூட்டிங்கில் நடித்து வருகிறார் சூரி. அப்போது சூரி, ரஜினியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தினை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘ இந்தப் புத்தாண்டு மிகச் சிறப்பாகத் தொடங்கியது தலைவரின் நல்லாசியுடன் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ‘ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.