தயாராகுமா சூது கவ்வும் பார்ட் -2?! விஜய் சேதுபதியை துரத்தும் தயரிப்பு நிறுவனம்!

விஜய் சேதுபதி காமெடி மற்றும் அசால்ட் கலந்து புதுவிதமாக நடித்து ரசிகர் மத்தியில்

By manikandan | Published: Jul 10, 2019 05:01 PM

விஜய் சேதுபதி காமெடி மற்றும் அசால்ட் கலந்து புதுவிதமாக நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமே சூது கவ்வும். இந்த படத்தின் மூலம் தான் நலன் குமாரசாமி இயக்குனராக அறிமுகமானார். சி.வி.குமார் தயாரித்து இருந்தார். தயாரிப்பாளர் சி.வி.குமார் தற்போது இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுத்து வருகிறார். அதேபோல சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தினையும் எடுக்க திட்டமிட்டுள்ளார். நலன் குமாரசாமி இப்படத்தினை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க வைக்க மீண்டும் விஜய் சேதுபதியை படக்குழு அணுகுகிறதாம். ஆனால் விஜய் சேதுபதி இதுவரை ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னைக்கே வராமல் தீவிர ஷூட்டிங்கில் உள்ளார். இவர் தற்போது பிசியாக நடித்து வருவதால் முதலில் அவரை சந்திக்க வேண்டும். அதன் பிறகு கதை கூறி, அந்த கதை பிடித்து போய், கால்ஷீட் எல்லாம் ஒத்து வந்தால் படம் வரும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Step2: Place in ads Display sections

unicc