மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சோனியா காந்தி.!

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த ஜூலை 30-ஆம் தேதி சர்

By murugan | Published: Aug 02, 2020 02:42 PM

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த ஜூலை 30-ஆம் தேதி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவர் வழக்கமான சோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவமனையின் நிர்வாகக் குழு தலைவர் டாக்டர் டி.எஸ்.ராணா கூறுகையில், சோனியா காந்தி கடந்த ஜூலை 30-ம் தேதி மாலை 7 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து தொடர்ந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.  மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் போது அவரின் உடல்நிலை சீராக இருந்தது என அவர் தெரிவித்தார்.

Step2: Place in ads Display sections

unicc