ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட மகன் , தந்தை ..!

  • ஜார்கண்ட் மாநிலத்தில் குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் பழங்குடி இனமக்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகிறார்கள்.
  • ஒரு தொண்டு நிறுவனம் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த மகன் , தந்தை இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைத்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த கிராமத்தில் ராம்லால் , ஷாக்கோரி என்ற தம்பதி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஜித்தீஷ் என்ற மகன் உள்ளார். இவரும் திருமணம் செய்து திருமணம் செய்துகொள்ளாமல் அருணா என்ற பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில்  ஒரு தொண்டு நிறுவனம் இந்த கிராமத்த்தில் உள்ளவர்கள் பலர் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வருவதால் தங்கள் சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி ராம்லால் மற்றும் அவரது ஜித்தீஷ் இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைத்தனர்.

author avatar
Dinasuvadu desk