சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றது- மன்மோகன் சிங்

இந்தியாவில்  சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றது என்று முன்னாள்

By Fahad | Published: Mar 30 2020 06:44 PM

இந்தியாவில்  சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில்  ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில்  சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றது. பெருகிவரும் சகிப்பின்மை, வகுப்புவாதம், வன்முறையால் நாட்டின் பன்முகதன்மை பாதிக்கப்பட்டு, நாடு பிளவுபடும் சூழலுக்கு தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த செயல்பாடுகள் நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள குறிக்கோள்களுக்கு எதிராக  உள்ளது. நம் தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை விட வேறு எதுவும் முக்கியமில்லை. இந்தியாவை யாராலும்  பிரிக்க முடியாது என்று பேசினார்.