பறக்கும் இயந்திரம் மூலம் ஆங்கிலக் கால்வாயை கடந்த இராணுவ வீரர்!

ஃபிராங்கி ஸபாட்டா என்பவர் ஒரு இராணுவ வீரர் ஆவார். இவர் ஜெட் தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய அளவிலான பறக்கும் விமானம் ஒன்றை  பிடித்துள்ளார். இவர் கண்டுபிடித்த இந்த விமானத்தில் நின்றபடி ஃபிராங்கி பிறந்துள்ளார். இதனை காண சாங்கட்டே பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர்.

இந்நிலையில், இவர் கண்டுபிடித்த அந்த பறக்கும் இயந்திரத்தில், தெற்கு இங்கிலாந்தையும், வடக்கு பிரான்சையும் பிரிக்கும், ஆங்கிலக் கால்வாயை கடந்து சென்றுள்ளார். இவர் கடந்து செல்லும் இந்த காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இவர் ஏற்கனவே இந்த ஆங்கில கால்வாயை கடப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி, தோல்வியில் முடிந்துள்ளது. இவரது இந்த இரண்டாவது முயற்சியில் இவர் வெற்றி பெற்றதையடுத்து, பலரும் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.