சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம்.! 20,000 விவசாயிகளுக்கு முன்னுரிமை- மின்சாரத்துறை அமைச்சர் பேச்சு.!

  • தமிழக சட்டப்பேரவை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய, அமைச்சர் தங்கமணி மத்திய மாநில அரசுகள் பங்களிப்புடன் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்களை குறித்து அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதையடுத்து கூட்டத்தொடரில் ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் கேள்விகள் எழுப்பி விவாதத்தை நடத்தினர். அப்போது மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, சோலார் தகடு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்று கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மத்திய மாநில அரசுகள் பங்களிப்புடன் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், அதற்கான விலையையும் நிர்ணயம் செய்யப்பட்டு வருவதாகவும் முதற்கட்டமாக 20,000 விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் விவசாயிகள் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இந்த திட்டத்தை அரசு ஊக்குவிக்கும் என்றும் அமைச்சர் தங்கமணி பேரவையில் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்