வெங்காயத்தில் இவ்வளவு நற்குணங்களா? வாருங்கள் பார்ப்போம்!

வெங்காயம் பொதுவாக நான் சமையலுக்கு வழக்கமாக பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாகும். அண்மையில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து அதன் மதிப்பை காட்டியது. ஆனால் அந்த வெங்காயத்தின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் அதைவிட அதிகம். அவை என்னவென்று தெரியுமா வாருங்கள் பார்ப்போம்.

மருத்துவகுணங்கள் மற்றும் பயன்கள் 

வெங்காயம் இதயத்தின் தோழன் என்று அழைக்கப்படுகிறது, ஏனென்றால் இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து கொழுப்பு சேராமல் இருக்காமல், நன்றாக ரத்த ஓட்டம் ஓடவும் உதவி செய்கிறது. குளவி, தேனீ போன்றவை கொட்டிவிட்டால் அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தால் அதிலுள்ள  என்சைம் உடலில் வலியையும் அழற்சியையும் உண்டாக்குகின்ற அந்த குளவியின் கூட்டுப் பொருளை சிதைத்து விட்டு விஷத்தை முறித்து விடுகிறது.

யூரிக் அமிலம் அதிகமாக இந்த வெங்காயத்தில் இருப்பதால் சிறுநீர் பையில் உள்ள கற்களை கரைக்கும் தன்மையுடையது. முதுமையில் வரும் மூட்டு வலி மற்றும் உடல் வலிகளுக்கு வெங்காயத்தையும் கடுகு எண்ணெயையும் சேர்த்து தடவினால் வலி குறையும்.

நாலைந்து வெங்காயத்தை அரைத்து வெல்லத்துடன் சாப்பிட பித்தம் குறையும். மற்றும் பல் வலியை போக்க வெங்காயச் சாற்றையும் வெந்நீரையும் கலந்து கொப்பளிக்க சரியாகும். அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் குடித்தால் நுரையீரல் சுத்தமாக இருக்கும்.

author avatar
Rebekal