இந்த சின்ன காயில் இவ்வளவு நன்மைகளா?

இந்த சின்ன காயில் இவ்வளவு நன்மைகளா?

அதலக்காயில் உள்ள அற்புதமான குணங்கள் :

இன்று நாம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகளை உண்பதை விட, நமது நாவுக்கு ருசியான உணவுகளை தான் விரும்பி உண்ணுகிறோம். இந்த ருசியான உணவுகளை விரும்பி உண்பதால், நமது உடலில் பல வகையான ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்துகிறது.

தற்போது இந்த பதிவில் அதலக்காயில் உள்ள அற்புதமான மருத்துவ பயன்கள் பற்றி பாப்போம். இந்த காய் எந்த நாட்டிலும் விளைவதில்லை. இது நமது  மட்டுமே விளைய கூடிய காய்களில் ஒன்று. இது, தமிழ்நாட்டில் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் அதிகமாக கிடைக்கும்.

இந்த காயில், இந்தக் காயில், துத்தநாகம், வைட்டமின்சி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளது.

நீரிழிவு நோய்

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இந்த பிரச்சனை உள்ளவர்கள், இந்த காயை உணவில் சேர்த்து வந்தால், மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம்.

வயிற்று பிரச்சனை

அதலக்காய் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது வயிற்றில் காணப்படும் கிருமிகளை அளிப்பதோடு, குடற்புழு பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

உடல் எரிச்சல்

உடல் எரிச்சல் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த மருந்தாகும். இப்பிரச்சனை உள்ளவர்கள் தங்களது உணவில் தினமும் இந்த காயை சேர்த்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube