தமிழகத்தில் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.4.14 கோடி பறிமுதல்!!

  • தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.4.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் அதிகாரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்  மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.4.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மொத்தம் ரூ.4.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.