தனுஷிற்கு அம்மாவாக நடிக்கும் சினேகா

தனுஷிற்கு அம்மாவாக நடிக்கும் சினேகா

  • இயக்குனர் துரைசெந்தில்குமார் இயக்குகின்ற புதிய படத்தில் தனுஷ்  நடித்து வருகிறார்.துரைசெந்தில்குமார் இயக்கும் படத்தில் தனுஷ் இரட்டை நடிக்கிறார்.
  • அப்பா தனுஷ்விற்கு ஜோடியாகவும் , மகன் தனுஷ்விற்கு அம்மாவாகவும் நடிக்க உள்ளார் சினேகா.

நடிகை சினேகா தமிழ் சினிமாவில் புன்னகை அரசியாக வலம் வந்தவர்.  சினேகா முதலில் மலையாளத்தில் “இங்கனே ஒரு நீல பாக்ஷி” என்ற படத்தில் நடனமாடி நடித்துள்ளார்.

பின்னர் தமிழில் “என்னவளே”  படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதன் பின் பல பிரபல நடிகர்களுடன் தமிழில் நடித்துள்ளார்.

சினிமாவில் நடிகைகள் பலர்  திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுகின்றனர்.அதேபோல சினேகா திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்து கொண்டார்.

இந்நிலையில் சினேகாவிற்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க அதிகமான வாய்ப்பு தேடி வந்தது.எனக்கு இன்னும் வயதாகவில்லை என கூறி சினேகா மறுத்து வந்தார்.

இந்நிலையில் இயக்குனர் துரைசெந்தில்குமார் இயக்குகின்ற புதிய படத்தில் தனுஷ்  நடித்து வருகிறார்.துரைசெந்தில்குமார் இயக்கும் படத்தில் தனுஷ் இரட்டை நடிக்கிறார்.

இந்த படத்தில் அப்பா தனுஷ்விற்கு ஜோடியாகவும் , மகன் தனுஷ்விற்கு அம்மாவாகவும் நடிக்க உள்ளார் சினேகா.மேலும் சினேகா கடைசியாக “வேலைக்காரன் ” படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *