அதிவிரைவாக 2,000 ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்த ஸ்மிருதி மந்தனா ..!

இந்திய மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றனர்.நேற்று நடந்த கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் போட்டியில்  இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்மிருதி மந்தனா  ஒருநாள் போட்டிகளில் 2,000 ரன்கள் எடுத்த இரண்டாவது அதிவேக இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இவர் இதுவரை 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி  2,025 ரன்கள் எடுத்துள்ளார் . ஒருநாள் போட்டியில் பெலிண்டா கிளார்க் மற்றும் மெக் லான்னிங் ஆகியோருக்கு பிறகு இந்த சாதனையை படைத்த மூன்றாவது பெண் என்ற பெருமையை பெற்றார்.
இவர் இதுவரை நான்கு சதங்கள் மற்றும் 17 அரைசதங்களை அடித்துள்ளார்.ஒருநாள் போட்டியில் 2,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் பெற்றார். அவர் 48 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை  எட்டியிருந்தார்.
ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க்  41 இன்னிங்ஸ்களிலும் ,அவரைத் தொடர்ந்து மெக் லான்னிங் 45 இன்னிங்ஸ்களிலும் இந்த சாதனையை படைத்தனர்.
 

author avatar
murugan