தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்க்கு முன்னேறிய ஸ்மித் !

இங்கிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையே  5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட

By Fahad | Published: Apr 01 2020 05:19 PM

இங்கிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையே  5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி  டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டி முடிவில் பேட்டிங் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. அதன்படி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் 92 ரன்கள் எடுத்ததால் ஸ்மித் 913 புள்ளிகளுடன்  மூன்றாம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.  இரண்டாம் இடத்தில் இருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 887 புள்ளியுடன் மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளார். இந்திய வீரர்  புஜாரா 881 புள்ளியுடன் நான்காம் இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா ஒரு இடத்திற்கு  முன்னேறி  ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளார்.

More News From ஸ்மித்