பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட வேண்டும் என ராகுல் காந்தி அறைகூவல் விடுக்கிறார்!

  • ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி பேசுகையில், இந்தியாவில் மேக் இன் இந்தியா இல்லை. ரேப் இன் இந்தியாவாக தான் உள்ளது. என கூறினார்.
  • இதற்கு கண்டம் தரும் வகையில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி, மக்களவையில்  ஆவேசமாக தனது கருத்தை முன் வைத்தார். 

ஜார்கண்ட் மாநில தேர்தல் 5 கட்டங்களில் 3 கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்டது. அடுத்து 4 கட்ட தேர்தல் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ‘ இந்தியாவில் இருப்பது மேக் இன் இந்தியா கிடையாது. ரேப் இன் இந்தியா. பெண்களை பாஜகவினரிடம் இருந்து தான் பெண்களை பாதுகாக்க வேண்டும். ‘ என தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மக்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி பேசுகையில், ‘ ஒரு கட்சி தலைவர் இப்படி பேசியது இதுவே முதல் முறை. இந்தியாவில் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட வேண்டும் என ராகுல் காந்தி அறைகூவல் விடுகிறார்’ என ஸ்மிரிதி ராணி தனது கண்டனத்தை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து அவையை தள்ளிவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.