அடுத்த மாத இறுதிக்குள் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்-அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த மாத இறுதிக்குள் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர்  கூறுகையில்,தமிழ் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை வைத்து பள்ளிகளில் கலாச்சார பண்பாடுகளை தெரிந்துகொள்ளும் வகையில் விடுமுறை நாட்களில் வகுப்புகள் எடுக்க முதலமைச்சரிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது.

அடுத்த மாத இறுதிக்குள் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது .நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பது மட்டும்தான் பள்ளி கல்வி துறை வேலை. தனியாரில் படிப்பவர்கள் ஆண்டு முழுவதும் நீட் தேர்வுக்கு பயிற்சி எடுக்கிறார்கள்.ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் விடுமுறை நாட்களில் மட்டும் தான் பயிற்சி எடுக்கிறார்கள்.அதனால் தான் அவர்கள் அதிக அளவில் தேர்வு ஆவதில்லை என்று தெரிவித்தார்.