தூக்கமின்மை பிரச்சனையால் மிகவும் அவதி படுகிறீர்களா ! அப்ப இந்த ஹெல்தி ட்ரிங்க குடிங்க !

அன்றாடம் நம் வாழ்க்கையில் பெரிதும் பாதிக்கபடும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று தூக்கமின்மை. இதனை இன்சொமியா என்ற பெயரால் அழைக்கிறார்கள். இந்த பிரச்சனையால் பலரும் பாதிக்கபடுகிறார்கள்.இதனால் பல நோய்  தாக்குதலுக்கும் ஆளாக நேரிடுகிறார்கள்.

இரவில் குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.மேலும் மது மற்றும் கஃபைன் நிறைந்த பானங்கள் அருந்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

தூக்கமின்மை பிரச்சனைகள் இருப்பதால நாம் பலவகையான பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.நமது மூளை மிகவும் சோர்வடையும்.எனவே இந்த பிரச்சனைகளில் இருந்து  நம்மை பாதுகாக்க ஒரு சில ஹெல்த் ட்ரிங்களை குடிப்பது மிகவும் நல்லது.அவற்றை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

பால்:

பாலை நன்கு காய்ச்சி இரவில் நாம் தூங்குவதற்கு முன்பு குடிக்கும் போது இரவில் நல்ல தூக்கம் வருவதற்கு இது உதவியாக இருக்கும். பாலில் கால்சியம் மற்றும் செரோடோனின் எனும் பொருட்கள் நிறைந்து காணப்படுவதால் இரவில் நமக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

வாழைப்பழ ஷேக் :

 

வாழைப்பழம், தேன், பால் கலந்து ஷேக் செய்து குடித்தால் அது நமக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கும். மேலும் வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், ட்ரிப்டோபான் முதலிய சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் இது நமது உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கும்.மேலும் தூக்கத்தை ஏற்படுத்தகூடிய செரடோனினை தூண்டும்.

பாதாம் மற்றும் குங்குமபூ பால்:

 

பாதாம் மற்றும் குங்குமபூ பாலை நாம் இரவில் குடிப்பதால் நமக்கு நல்ல தூக்கம் வருவதற்கு உதவியாக இருக்கும். மேலும் எப்போதும் நரம்பு மண்டலத்தை சீராக வைத்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

இளநீர் :

இளநீர் அருந்தும் போது நமது உடலில் ஏற்படும் மெக்னீசியம் பற்றாக்குறையை நிவர்த்தி செய்கிறது.மேலும் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் பற்றாக்குறையால் ஏற்படும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. அதாவது இளநீரை அருந்துவதால் மனஅழுத்தம் குறைக்க பட்டு தூக்கத்தை தூண்டுகிறது.

 

 

Leave a Comment