கீழடி அகழாய்வில் பெரிய விலங்கின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!

கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் பெரிய விலங்கின் எலும்புக்கூடு ஒன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோன வைரஸ் அச்சம் காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ளது. தற்பொழுது நடைமுறையில் உள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கு, சில தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, கீழடியில் அகழாய்வு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், அங்கு நடைபெற்று வந்த ஆய்வில் பெரிய வகை விலங்கின் எலும்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அதுகுறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாலும், ஆய்வுகள் முடிந்தபின் அது எந்தவகை விலங்கு என தெரியவரும் என ஆய்வாளர்கள் கூறினார்கள்.