விஸ்வாசம் படத்தின் வசூலை பற்றி இயக்குனர் சிவா கூறிய அசத்தல் பதில்!!

விஸ்வாசம் படத்தின் வசூலை பற்றி இயக்குனர் சிவா கூறிய அசத்தல் பதில்!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் விஸ்வாசம். இந்த திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும், குடும்பங்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் வசூல் 8 நாளில் தமிழ்நாட்டில் 125 கோடி வசூல் செய்துள்ளதாக அந்த படத்தை விநியோகிஸ்த்த கே.ஜே.எஸ் ஸ்டூடியோஸ் தகவலை வெளியிட்டிருந்தது.

இது குறித்து அப்பட இயக்குனர் சிறுத்தை சிவா ஒரு பேட்டியில் கூறும்போது, படத்தின் வசூல் அதனை வெளியிடும் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தது. ஒரு படைப்பாளியாக நான் படத்தின் வசூலை மனதில் வைப்பதில்லை. அப்படி மனதில் வைத்தால் எனது  படைப்பாற்றலை அது கெடுத்துவிடும். நான் எப்போதும் எனது கதையை மட்டுமே நம்புவேன். வசூலை பார்த்தால் நமது படைப்பாற்றல் கெட்டுவிடும்.

ரசிகர்கள் படத்தின் வசூலை மனதில் வைத்தால் ரசிகர்களின் ரசனை கெட்டுவிடும் என தெரிவித்துள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *