திருமணத்தடை-குழந்தையின்மையை தவிடு பொடியாக்கி அருளும் அர்த்த-ஜாம வழிபாடு!!

சிவராத்திரி என்பது, பிரளய காலத்தின் போது படைக்கும் பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரம்பொருள் பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார் பரமேஸ்வரி.இந்த  பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, ஈஸ்வரனிடம் நான் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது ‘சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார். அந்த நாளை ஆண்டு தோறும் சிவராத்திரியாக அனைவரும் கொண்டாடி வருகிறோம்.

இத்தகைய சிவராத்திரியை முறையாக வழிபட்டால் அதன் பலன்கள் அளப்பறியது. அவ்வாறு நாகதோஷம்,திருமணத்தடை,குழந்தையின்மை,போன்றவற்றை நீக்கி புது வாழ்க்கை அத்தியாத்தை துவக்கி வைக்கும்  ஆற்றல் கொண்டது மகாசிவராத்திரி

ஒரு முறை ஆதிசேஷன் பூலோகத்தை தன் தலையில் சுமந்து, தன் பலம் அனைத்தையும் இழந்து தவித்து உள்ளார்.அவ்வாறு தவித்த ஆதிசேஷன் மகாசிவராத்திரி அன்று -முதல் ஜாமத்தில்  கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரரையும், 2 ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமியையும், 3 ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், 4 ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் தரிசித்தார். இந்த ஜாமபூஜையால் மகிழ்ந்த சிவபெருமான் பூமி முழுவதையும் தாங்கக்கூடிய வலிமையை ஆதிசேஷனுக்கு வழங்கினார்.மகாசிவராத்திரி அன்று குறிப்பிட்ட நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் சர்ப்ப தோஷங்கள், ராகு- கேதுவால் ஏற்படுகின்ற திருமணத் தடை மற்றும் தள்ளி போகும் குழந்தை பாக்கியமின்மை போன்ற பாதிப்புகள் நீங்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.சிவராத்திரி அன்று அம்பிகை நாயகனை வணங்கினால் எண்ணியதை எல்லாம் வாரி வழங்குவர்.இறையை உள்ளுணர்வு மூலமே அறியலாம் அதையும் அறிவ வைப்பது அவனே! சிவாய….நம..

author avatar
kavitha