சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படம் நிகழ்த்திய சாதனை !

நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக  வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது “நம்ம வீட்டு பிள்ளை” படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அனு இம்மானுவேல் நடித்துள்ளார்.இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
இந்த படம் அண்ணன் ,தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்க பட்டுள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசைஅமைத்துள்ளார்.இந்த படம் தற்போது பல குடும்ப ஆடியன்ஸுகளை கவர்ந்துள்ளது. இதையடுத்து இந்த படத்தில் இருந்து வெளியான “மைலாஞ்சி ” எனும் பாடல் தற்போது யூடியூப்பில் 1 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.இதனை அறிந்த  அவரது ரசிகர்கள் இணையத்தில் இதை கொண்டாடி வருகிறார்கள்.இதோ அந்த பதிவு