உலக கோப்பை கிரிக்கெட் போட்டி- விளம்பர தூதராக நடிகர் சிவகார்த்திகேயன் நியமனம்

ஆஸ்திரேலியாவில் வருகின்ற 21ந்தேதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது

By kavitha | Published: Feb 17, 2020 06:50 AM

ஆஸ்திரேலியாவில் வருகின்ற 21ந்தேதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது கோலகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடரை விளம்பரம் செய்ய ஆஸ்திரேலிய தூதரகம் முடிவு செய்து உள்ளது.   இந்நிலையில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக் கதை குறித்த திரைப்படத்தை தயாரித்து நடித்த நடிகர் சிவகார்த்திகேயனை ஆஸ்திரேலிய அணுகியது. இதை அடுத்து நடந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் சிவகார்த்திகேயன் இப்போட்டியின் விளம்பர தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில் கனா படத்தை தயாரித்ததால் அப்படத்தை பார்த்து ஆஸ்திரேலியாவில் நடக்கின்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை விளம்பரம் செய்ய என்னை அணுகினார்கள்.இப்போட்டிக்கு நாம் அனைவரும் ஆதரவு தரவேண்டும். நமது அணியை மட்டுமல்லாமல் அனைத்து வீராங்கனைகளுக்கும் நாம் நம்முடைய ஆதரவை கொடுக்க வேண்டும்.இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என  கணிக்கிறேன். என்று கூறிய அவர் அனைத்து அணிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்  என்று கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc