சிவகார்த்திகேயனின் இரண்டு 'பெரிய' ஆசைகளில் ஒன்று நிறைவேறிவிட்டது! இன்னொன்று..?

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்துள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

By Fahad | Published: Mar 28 2020 11:34 AM

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்துள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்ததாக ஹீரோ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் டிசம்பரில் வெளியாக உள்ளது. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை, அடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் அறிவியல் ஆராய்ச்சி படமாக உருவாக உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். சிவகார்திகேகேயன் படத்திற்கு முதன் முதலாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இது குறித்து சிவாவிடம் கேட்டதற்கு , ' சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதும், இரண்டு ஆசைகள் வந்தது. ஒன்று ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும். மற்றொன்று ஏ.ஆர்.ரகுமான்இசையில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்பதுதான். இவை இரண்டில்  ஒன்று நிறைவேறி வருகிறது. ' என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

More News From P S MITHRAN